செய்திகள்

சுழற்பந்து வீச்சாளரை நீக்க கோலி திட்டம்

Published On 2018-01-24 05:18 GMT   |   Update On 2018-01-24 05:18 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை நீக்கவது குறித்து ஆலோசனை செய்யப்போவதாக விராட் கோலி கூறியுள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கேப்டவுன் ஆடுகளம் போன்று தான் ஜோகன்னஸ்பர்க் ஆடுகளமும் இருக்கிறது. நிறைய புற்கள் உள்ளன. போட்டி முழுவதும் உயிர்ப்புடன் கூடிய ஆடுகளமாக இது இருக்கப்போகிறது. அதனால் பந்துவீச்சில், பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் எல்லாமே வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது குறித்து சிந்திப்போம். தென்ஆப்பிரிக்க அணியினரும் இது பற்றி உறுதியாக யோசிப்பார்கள்.

இந்திய பவுலர்கள் முதல் இரு டெஸ்டுகளிலும் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயமாகும். வெளிநாட்டு பயணத்தில் இது மாதிரி அடிக்கடி நடப்பதில்லை. பவுலர்கள் தொடர்ந்து இதே மாதிரி செயல்பட்டால், அது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்.

ஜெயித்தாலும், தோற்றாலும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்கிறேன். எந்த ஒரு தருணத்திலும் அதை நிறுத்தக்கூடாது’ என்றார். 
Tags:    

Similar News