செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்

Published On 2018-01-23 13:59 GMT   |   Update On 2018-01-23 13:59 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் நியமிக்கப்பட்டுள்ளார். #IndianWomenTeam #Harmanpreet
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. டி20 தொடர் பிப்ரவரி 13-ந்தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஹர்மன்ப்ரீத் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மந்தனா துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீராங்கனைகள் விவரம்:-

1. ஹர்மன்ப்ரீத் (கேப்டன்), 2. மந்தனா (துணைக்கேப்டன்), 3. மிதாலி ராஜ், 4. வேதா கிருஷ்ணமூர்த்தி, 5. ஜெமிமா, 6. தீப்தி, 7. அனுஜா பாட்டீல், 8. தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), 9. பிரவீண் (விக்கெட் கீப்பர்). 10. பூணம் யாதவ், 11. கயாக்வாட், 12. ஜூலன், 13. ஷிகா பாண்டே, 14. பூஜா வாஸ்ட்ராகர், 15. ராதா யாதவ்.

இதில் ராதா யாதவ், நுசாத் பிரவீண் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடிபித்துள்ளனர். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் 163 பந்தில் 202 ரன்கள் குவித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து டி20 போட்டியிலும் இடம்பிடித்துள்ளார்.
Tags:    

Similar News