செய்திகள்

டெஸ்ட் போட்டியில் 3000 ரன்னைக் கடந்தார் டு பிளிசிஸ்

Published On 2018-01-16 14:15 GMT   |   Update On 2018-01-16 14:15 GMT
செஞ்சூரியன் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 36 ரன்களை கடந்தபோது டு பிளிசிஸ் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்னைத் தொட்டார். #SAvIND #FafDuPlessis
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 335 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் 63 ரன்கள் சேர்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 307 ரன்கள் சேர்த்தது.

28 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் 61 ரன்களும், டி வில்லியர்ஸ் 80 ரன்களும் எடுத்தனர். அதன்பின் வந்த டு பிளிசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



மிகவும் நிதானமாக விளையாடிய டு பிளிசிஸ் 36 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். தொடர்ந்து விளையாடிய டு பிளிசிஸ் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளிசிஸ் 76 இன்னிங்சில் 7 சதம், 16 அரைசதங்களுடன் 3000 ரன்கள் அடித்துள்ளார். #SAvIND #FafDuPlessis
Tags:    

Similar News