செய்திகள்

3வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

Published On 2017-12-24 15:24 GMT   |   Update On 2017-12-24 15:24 GMT
மும்பையில் நடைபெற்று வரும் 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இலங்கை அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
மும்பை:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான  டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிக்வெலா மற்று உபுல் தரங்கா களமிறங்கினர். இரண்டாவது ஒவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டின் அபாரமான பந்துவீச்சில் டிக்வெலா அவுட்டானார்.

இதையடுத்து, களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்  சதீராவும் குணரத்னேவும் ஓரளவு தாக்குப்பிடித்தனர். சதீரா 21 ரன்களிலும், குணரத்னே 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 117 ரன்களில் 7 விக்கெட்டை இழந்தது. அதை தொடர்ந்து ஷனகாவும் தனஞ்சயாவும் சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ஷனகா 24 பந்துகளில் 2 சிக்சருடன் 29 ரன்களுடனும், தனஞ்சயா 11 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் உனத்கட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
Tags:    

Similar News