செய்திகள்

மெஸ்சியை சந்தித்த சிரிய அகதியான ஊனமுற்ற பெண் ரசிகை; கனவு நனவானதாக பெருமிதம்

Published On 2017-12-16 05:17 GMT   |   Update On 2017-12-16 05:17 GMT
பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சியை சந்தித்தன் மூலம் தனது கனவு நனவானதாக சிரியா அகதியான இளம்பெண் பெருமிதமாக கூறியுள்ளார்.
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வசித்து வந்த பெருமூளை பக்கவாதத்தால் பாதித்த நுஜீன் முஸ்தபா என்ற 18-வது இளம்பெண் தனது சசோதரியுடன் அலெப்போ நகரில் இருந்து ஜெர்மனியின் கொலோன் நகருக்கு அகதியாக சென்றார்.

நுஜீன் தீவிர கால்பந்து ரசிகை. அதுவும் மெஸ்சி ஆடும் போட்டி என்றால் அதிக அளவில் பிடிக்குமாம். இதனால் ஒருமுறையாவது மெஸ்சியை நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஊனமுற்ற இளம்பெண்ணான நுஜீன் ஆசை வீண் போகவில்லை.

அவரது ஆசை பார்சிலோனா நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த கிளப், மெஸ்சியின் ஆட்டத்தை நுஜீன் நேரடியாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்தது. நுஜீன் டிசம்பர் 2-ந்தேதி செல்டாவிற்கு எதிராக பார்சிலோனா மோதிய ஆட்டத்தை காண பார்சிலோனா ஏற்பாடு செய்திருந்தது. நுஜீன் மெஸ்சி ஆட்டத்தை நேரில் கண்டு களித்தார்.



பின்னர், தனது கனவு நினைவாகியுள்ளது என்று பெருமிதம் அடைந்தார். இதுகுறித்து நுஜீன் கூறுகையில் ‘‘மெஸ்சியை பார்க்கையில் குழந்தை முகம் போன்று உள்ளது. 30 வயதாகிவிட்டாலும் இளம் வீரரைப் போல் உள்ளார்.

நான் கடந்த 2007-ல் இருந்து மெஸ்சி ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அதனால் தற்போது வளர்ந்துவிட்டார். இருந்தாலும் அவர் குழந்தை போன்றுதான் உள்ளார். மெஸ்சி மிகவம் கூச்சம் சுபாவம் உடையவர். அதில் இருந்து இன்னும் மாறவே இல்லை. மெஸ்சியை பார்த்தன் மூலம் என்னுடைய கனவு நனவாகியுள்ளது. இங்கிலாந்து ராணியை சந்திக்க வரும்புகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News