செய்திகள்

ஆண்டின் 365 நாட்களும் குழந்தைகள் தினம் தான் - சச்சின் டெண்டுல்கர்

Published On 2017-11-21 09:06 GMT   |   Update On 2017-11-21 09:06 GMT
புதுடெல்லியில் நடைபெற்ற யுனிசெப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் ஆண்டின் அனைத்து நாட்களும் குழந்தைகள் தினம் என கூறியுள்ளார்.
புதுடெல்லி:

புதுடெல்லியின் யுனிசெப் அமைப்பின் சார்பாக தியாகராஜ் மைதானத்தில் உலக குழந்தைகள் தின விழா நேற்று நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் சச்சின் மனநல குன்றிய சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது பேசிய அவர், தற்சமயம் உள்ள குழந்தைகள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. அதனை பயன்படுத்தி சிறுவர்களும் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றனர். அவர்கள் கம்பியூட்டர் மூலம் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கின்றனர்.

3 வயது குழந்தைகள் கூட கம்பியூட்டரை பயன்படுத்துகின்றனர். செல்போன் மூலம் கால் செய்கின்றனர் மற்றும் செய்தி அனுப்புகின்றனர். குழந்தைகளின் நம்பிக்கையின் அளவும் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தையை காலக்கட்டத்தை சேர்ந்த குழந்தைகளோடு ஒப்பிடும் போது அவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


குழந்தைகள் தினத்தை பற்றி என்னுடையை கருத்து என்னவென்றால், ஆண்டின் 365 நாட்களும் குழந்தைகள் தினம் தான் என சச்சின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News