செய்திகள்

சீன டென்னிஸ் போட்டி: இறுதிப்போட்டியில் ‌ஷரபோவா

Published On 2017-10-15 11:18 GMT   |   Update On 2017-10-15 11:18 GMT
சீனாவில் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான மரியா ‌ஷரபோவா தகுதி பெற்றுள்ளார்.

டியன்ஜின்:

சீனாவில் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான மரியா ‌ஷரபோவா தகுதி பெற்றார். ரஷியாவை சேர்ந்த அவர் அரை இறுதியில் 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் பெங்கை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் அவர் பெலாராசை சேர்ந்த ‌ஷபலென்காவை எதிர்கொள்கிறார்.

ஊக்கமருந்து விவகாரத்தால் 15 மாத தடைக்கு பிறகு களம் வந்துள்ள அவர் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

ஷாங்காய் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்)-இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரா (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். நடால் அரை இறுதியில் 7-5, 7-6 (7-3), என்ற கணக்கில் சிலிசையும் (குரோஷியா), பெடரர் 3-6, 6-3, 6-3 என்ற கணக்கில் டெல்போட்ரோவையும் (அர்ஜென்டினா) வீழ்த்தி இருந்தனர்.

Tags:    

Similar News