செய்திகள்

ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமனம்

Published On 2017-09-16 11:45 GMT   |   Update On 2017-09-16 11:45 GMT
ஆசியக்கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக மிட்பீல்டர் மன்ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காள தேச தலைநகர் டாக்காவில் அக்டோபர் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஹீரோ ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்பீல்டர் மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்கள வீரர் எஸ்.வி. சுனில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய தொடரின்போது இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்திய அணயில் இளைஞர்களும், அனுபவ வீரர்களும் இணைந்து காணப்படுகின்றனர்.


துணைக்கோப்டன் சுனில்

ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

கோல்கீப்பர்கள்: ஆகாஷ் சிக்தே, சுராஜ் கார்கேரா

தடுப்பாட்டக்காரர்கள்:-

1. டிப்சன் திர்கெய், 2. கோதாஜித் சிங், 3. சுரேந்தர் குமார், 4. ஹர்மன்ப்ரீத் சிங், 5. வருண் குமார்

மிட்பீல்டர்ஸ்:-

1. எஸ்.கே. உத்தப்பா, 2. சர்தார் சிங், 3. மன்ப்ரீத் சிங் (கேப்டன்), 4. சிங்லேன்சானா சிங், 5. சுமித்

முன்கள வீரர்கள்:-

1. எஸ்.வி. சுனில் (துணைக் கேப்டன்), 2. ஆகாஷ்தீப் சிங், 3. ராமன்தீப் சிங், 4. லலித் குமார் உபாத்யாய், 5. குர்ஜன்ட் சிங், 6. சத்பிர் சிங்.
Tags:    

Similar News