செய்திகள்

இடது கை பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்து சிக்சர் விளாசும் விராட் கோலி: வீடியோ

Published On 2017-09-06 13:07 GMT   |   Update On 2017-09-06 13:07 GMT
இந்திய அணியின் ரன் மெஷின் என்ற செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி, இடது கை பேட்ஸ்மேனாக சிக்ஸ் விளாசும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐம்பதுக்கு மேல் சராசரி வைத்துள்ளார். இந்த தலைமுறையில் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படும் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 30 சதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

விராட் கோலி வலது கை பேட்ஸ்மேன். பெரும்பாலும் இடது கை பேட்ஸ்மேனாக திரும்பி ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கமாட்டார். அரிதாக எப்போதாவது ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவார்.

ஆனால், இடது கை பேட்ஸ்மேனாக சிக்சர் விளாசும் வீடியோவை அப்லோடு செய்து, ‘‘இடது கை ஷாட் மிகவும் மோசமில்லை’’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 4-வது மற்றும் ஐந்தாவது போட்டிக்கு இடைப்பட்ட நாளில் கமர்ஷியல் ஷூட்டிங் நிகழ்ச்சியின்போது இலங்கை தெரு வீதியில் விராட் கோலி இடது கை பேட்ஸ்மேனாக பேட்டிங் செய்யும்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News