செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய 3848 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்த பேஸ்புக்

Published On 2017-09-06 10:11 GMT   |   Update On 2017-09-06 10:11 GMT
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமைக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக பேஸ்புக் 600 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் கோரியது தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரபலம் அடைந்துள்ளது. 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான ஒளிப்பரப்பு உரிமை நேற்று பிசிசிஐ-யால் கொடுக்கப்பட்டது.

இதற்கு சுமார் 24 நிறுவனங்கள் போட்டியிட்டன. சமூக இணையத் தளமான பேஸ்புக் ஐ.பி.எல். தொடரை லைவ் ஸ்ட்ரீம் மூலம் ஒளிப்பரப்ப விரும்பியது. இதற்காக 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (3847.60 கோடி ரூபாய்) விண்ணப்பித்திருந்தார்.



ஆனால், உலகளவில் அனைத்து உரிமைகளையும் சுமார் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஸ்டார் இந்தியா உரிமை கோரியிருந்ததால் பேஸ்புக் நிறுவனத்திற்கு லைவ் ஸ்ட்ரீம் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
Tags:    

Similar News