செய்திகள்

இளையோர் கிரிக்கெட்டிற்கான கட்டமைப்பு உலகளவில் இந்தியாவில்தான் பெஸ்ட்: டபிள்யூ.வி. ராமன்

Published On 2017-08-21 12:07 GMT   |   Update On 2017-08-21 12:07 GMT
இளையோர் கிரிக்கெட்டிற்கான கட்டமைப்பு வசதிகள் உலகளவில் இந்தியாவில்தான் சிறப்பாக உள்ளது என்று பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறியுள்ளார்.
19 வயதிற்கு உட்பட்ட இந்திய இளையோர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் இந்திய இளைஞர்கள் வெற்றி பெற்று அசத்தினார்கள்.

இளையோர் அணிக்கு டபிள்யூ.வி. ராமன் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்த வெற்றிக்குப் பின் இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து அவர் கூறுகையில் ‘‘ஜூனியர் கிரிக்கெட் கட்டமைப்பு இந்தியாவில் உலகளவில் சிறந்ததாக உள்ளது. 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவும் இதில் சேரும்.



இளையோர் ஏராளமான போட்டிகளில், மிகச்சிறந்த மைதானத்தில் விளையாடுகிறார்கள். அவர்களுக்கு சிஸ்டம் சிறந்த அளவில் ஆதரவாக இருக்கிறது. உலகளவில் ஜூனியர் வீரர்களை பார்க்கையில் இந்தியாவில் உள்ளவர்கள் முன்னேற்றத்துடன் உள்ளனர்.

ஏராளமான வீரர்கள் 16-வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில அணிகள் அல்லது மண்டல அணிகளில் கிரிக்கெட் தொடங்கியவர்கள். சீசன் அல்லாத முகாமில் அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துள்ளனர். அனுபவம் மட்டும் அவர்கள் பெறவில்லை. அத்துடன் அவர்களுடைய திறமைகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
Tags:    

Similar News