செய்திகள்
தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் மினி சாஜி தாமஸ், ஜான்டி ரோட்சுக்கு நினைவு பரிசு வழங்கிய போது எடுத்த படம

டி.என்.பி.எல்.-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பை தருகிறது: ஜான்டி ரோட்ஸ்

Published On 2017-08-11 03:09 GMT   |   Update On 2017-08-11 03:09 GMT
டி.என்.பி.எல்.-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பை தருகிறது என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.
திருச்சி:

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பெஸ்டம்பர் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 21-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று நடந்த ‘கார்ப்பி-டியம்‘ என்னும் விருந்தினர் விரிவுரை பகுதியில் சிறப்பு அழைப்பாளராக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருப்பவருமான ஜான்டி ரோட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

எந்த துறையிலும் சிறந்த பயிற்சி செய்தால் உயர்ந்த வெற்றியை பெறலாம். எனது பெற்றோர் ஆசிரியர் ஆவார்கள். கட்டுபாடு மிக்க என்னுடைய பெற்றோரால் நான் உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஷேன் வார்னே போன்றவர்கள் சிறந்த வீரர்கள். ஆனால் என்னை மிகவும் கவர்ந்தவர் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் வாக்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துகிற நாடு கோப்பையை பெற முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் அந்த நிலையை மாற்றியது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எல்., ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக வாய்ப்பை தருகிறது.

பின்னர் அவர் மாணவ- மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னதாக தேசிய தொழில் நுட்ப கழகத்தின் இயக்குனர் மினி சாஜி தாமஸ், ஜான்டி ரோட்சுக்கு நினைவு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி வாரியர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் அஷோக் மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News