செய்திகள்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தூத்துக்குடி

Update: 2017-08-01 16:08 GMT
நெல்லையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நெல்லை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் ஆடிய தூத்துக்குடி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய துவக்க வீரர் வாஷிங்டன் சுந்தர், சதம் அடித்தார். 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரி 4 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். கவுசிக் காந்தி 35 ரன்கள் எடுத்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில் அலெக்சாண்டர் 2 விக்கெட்டும், யோ மகேஷ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. துவக்க வீரர் ராஜகோபால் சதீஷ் டக் அவுட் ஆனார். கோபிநாத் ஒரு ரன்னில் வெளியேறினார். இதையடுத்து அந்தோணி தாஸ், தலைவன் சற்குணம் நிதானமாக விளையாடினர்.
Tags:    

Similar News