செய்திகள்

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: தரவரிசை எப்படி மாறும்?

Published On 2017-07-26 03:42 GMT   |   Update On 2017-07-26 03:42 GMT
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி அல்லது தோல்வி அடைந்தால் தரவரிசை எப்படி மாறும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 123 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்கா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இலங்கை 92 புள்ளிகளுடன் 7-வது இடம் வகிக்கிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் புள்ளி எண்ணிக்கை 125 ஆக உயரும். 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் மாற்றமின்றி 123 புள்ளிகளிலேயே நீடிக்கும். 1-0 என்ற கணக்கில் வென்றால் ஒரு புள்ளியை இழக்க வேண்டி இருக்கும். 1-1 என்று தொடர் சமனில் முடிந்தால் இந்தியாவின் புள்ளி எண்ணிக்கை 119 ஆக குறையும்.

அதே சமயம் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழக்கும் பட்சத்தில் 116 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு இறங்கும். 0-3 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தால் 114 புள்ளிகளாக சரிவடையும். அவ்வாறு நிகழ்ந்தால் இலங்கை அணி முன்னேறி 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும். இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றால் 4-வது இடத்துக்கும், 1-0 என்ற கணக்கில் வெற்றி கண்டால் 5-வது இடத்துக்கும் முன்னேறலாம்.
Tags:    

Similar News