செய்திகள்

ஐ.சி.சி. கனவு அணிக்கு மிதாலி ராஜ் கேப்டன்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இடம்

Published On 2017-07-24 15:51 GMT   |   Update On 2017-07-24 15:51 GMT
ஐ.சி.சி.யின் பெண்கள் உலகக்கோப்பை தொடருக்கான கனவு அணிக்கு மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கவுருக்கும் இடம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.சி.சி. நடத்தும் தொடர் முடிந்தபின் சிறந்த வீரர்களை கொண்ட ஒரு கனவு அணியை அறிவிக்கும்.

அதன்படி 2017-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான ஐ.சி.சி.-யின் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் மிதாலி ராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 115 பந்தில் 171 ரன்கள் குவித்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் இடம் கிடைத்துள்ளது.



1. மிதாலி ராஜ் (இந்தியா, கேப்டன்) 409 ரன்கள்,

2. லாரா வல்வார்த் (இங்கிலாந்து)- 324 ரன்கள்,

3. டாம்சின் பியுமான்ட் (இங்கிலாந்து) 410 ரன்கள்,

4. எலிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) 404 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுக்கள்,

5. சாரா டெய்லர் (இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்) 396 ரன்கள்,

6. ஹர்மன்ப்ரீத் கவுர் (இந்தியா) - 359 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுக்கள்,

7. தீப்தி ஷர்மா (இந்தியா) - 216 ரன்கள் மற்றும் 12 விக்கெட்டுக்கள்,

8. மரிஸேன் காப் (தென்ஆப்பிரிக்கா) - 13 விக்கெட்டுக்கள்,

9. டேன் வான் நிகெர்க் (தென்ஆப்பிரிக்கா) - 99 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுக்கள்,

10. அன்யா ஸ்ரப்சோல் (இங்கிலாந்து) - 12 விக்கெட்டுக்கள்,

11. அலெக்ஸ் ஹார்ட்லி (இங்கிலாந்து) - 10 விக்கெட்டுக்கள்.

12-வது வீரர் நடாலி ஸ்சிவர் (இங்கிலாந்து) - 369 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுக்கள்.
Tags:    

Similar News