செய்திகள்

டி.என்.பி.எல்.: சேப்பாக் அணிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருவள்ளூர் வீரன்ஸ்

Published On 2017-07-24 15:42 GMT   |   Update On 2017-07-24 15:42 GMT
டி.என்.பி.எல். டி20 லீக் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு விபி திருவள்ளூர் வீரன்ஸ் 127 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற திருவள்ளூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் என்.எஸ். சதுர்வேது, சி ஹரி நிசாந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹரி நிசாந்த் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த பி. அபராஜித் 13 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் சதுர்வேது 22 பந்தில் 35 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் ராஜன் 14 ரன்னும், அபிஷேக் தன்வார் 17 பந்தில் 25 ரன்களும் எடுக்க, திருவள்ளூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் சதிஷ் 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது.
Tags:    

Similar News