செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கண்ணீர் விட்ட பெடரர், சிலிச்

Published On 2017-07-17 04:42 GMT   |   Update On 2017-07-17 04:42 GMT
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நேற்று நடந்த கிளைமாக்சில் மரின் சிலிச் காயத்தின் காரணமாகவும், பெடரர் வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியின் காரணமாகவும் கண்ணீர் விட்டனர்.
லண்டன் :

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா கடந்த இரண்டு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் நேற்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) 6-ம் நிலை வீரர் மரின் சிலிச்சும் (குரோஷியா) மோதினர். 

முதலாவது செட்டின் போது தடுமாறி கீழே விழுந்த மரின் சிலிச் இடது கால் பாதத்தில் காயமடைந்தார். 2-வது செட்டின் போது காயத்தன்மை அதிகமாகி சிகிச்சை பெற்றார். அப்போது வலியால் துடித்த அவர் கண்ணீர் விட்டார். இதனால் ஒரு கணம் மைதானமே நிசப்தம் ஆனது.



பிறகு அவர் களம் கண்ட போது அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆனாலும் எதிர்ப்பு இன்றி பெடரரிடம் பணிந்து விட்டார்.

மூன்று செட் முடிந்து வெற்றி கனிந்ததும் பெடரர் கண் கலங்கினார். 6 மாதங்களுக்கு முன்பு, ‘இனி பெடரர் ஓய்வு பெற வேண்டியது தான். அடிக்கடி காயம் ஏற்படுகிறது. வயதும் ஆகி விட்டது’ என்று விமர்சித்தனர். விமர்சனங்களை எல்லாம் தூள்தூளாக்கிய பெடரர் 35-வது வயதில் மீண்டும் விம்பிள்டனை கபளகரம் செய்து பிரமிப்பூட்டியுள்ளார். அதுவும் இந்த சீசனில் எந்த செட்டையும் இழக்கவில்லை. அதன் வெளிப்பாடே அவரது கண்களில் ஆனந்த கண்ணீராக பெருக்கெடுத்தது.
Tags:    

Similar News