search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விம்பிள்டன் டென்னிஸ்"

    • ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.
    • தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார்.

    செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். அந்த ஆத்திரத்தில் தமது டென்னிஸ் மட்டையை ஜோகோவிச் உடைத்தார். இந்த செயலுக்காக அவருக்கு 8,000 டாலர் அபராதம் விதித்துள்ளது விம்பிள்டன் டென்னிஸ் நிர்வாகம்.

    8,000 டொலர் அபராதம் என்பது தனியொரு டென்னிஸ் விளையாட்டு வீரருக்கு விதிக்கப்படும் பெருந்தொகை என்றே கூறப்படுகிறது.

    சுமார் 1.2 மில்லியன் பவுண்டுகளை பரிசாக வென்றுள்ள ஜோகோவிச், அது விரக்தியை ஏற்படுத்திய தருணம் எனவும், அல்கராஸ் அருமையான விளையாட்டை வெளிப்படுத்தினார் எனவும், வெற்றி பெற தகுதியான வீரர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி ஒன் தொலைக்காட்சியில் சுமார் 11.3 மில்லியன் பேர்கள் இறுதிப் போட்டியை கண்டுகளித்துள்ளனர். டென்னிஸ் மட்டையை உடைத்தது மட்டுமின்றி, நடுவர் கடிந்துகொள்ளும் நிலைக்கும் ஜோகோவிச் தள்ளப்பட்டார்.

    • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

    ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 2 வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சும், இத்தாலியின் ஜானிக் சின்னரும் மோதினர்.

    இதில், ஜோகோவிச் 6-3, 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதிப் போட்டி நடந்தது.
    • இதில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப், பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 2 வீராங்கனையான சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவும், துனீசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேரும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் சபலென்கா முதல் செட்டை கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜபேர் இரண்டாவது மற்றும் 3வது செட்டை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெடா வோண்ட்ரசோவா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் மோதினார்.

    இதில் வோண்ட்ரசோவா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
    • 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் லண்டனில் நடந்தது.
    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபங்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் முதல் செட்டை வென்றார். சுதாரித்துக் கொண்ட யுபங் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 4, 5வது செட்களை மெத்வதேவ் வென்றார்.

    இறுதியில் மெத்வதேவ் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டி லண்டனில் நடந்தது.
    • இதில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, 6ம் இடத்திலுள்ள துனிஷியா வீராங்கனை ஆன்ஸ் ஜபேருடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரிபாகினா முதல் செட்டை கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஜபேர் 2வது, 3வது செட்களை வென்றார்.

    இதன்மூலம் ஜபேர் 6-7 (5-7(ம் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • போபண்ணா- மேத்யூ எப்டென் ஜோடி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் அமெரிக்கா இணையை தோற்கடித்தது.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் கூட்டணி டேவிட் பெல் (நெதர்லாந்து)-ரீஸ் ஸ்டால்டெர் (அமெரிக்கா) இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் போபண்ணா- மேத்யூ எப்டென் கூட்டணி 7-5, 4-6, 7-6 (10-5) என்ற செட் கணக்கில் டேவிட் பெல் - (அமெரிக்கா) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

    ×