என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
- முதல் செட்டை இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.
- தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி - அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி, மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த யுகி பாம்ப்ரி ஜோடி, ஆட்டத்தின் 2-வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் அனல் பறந்தது.
இதில் அபாரமாக செயல்பட்ட மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹோராசியோ ஜெபலோஸ் (அர்ஜெண்டினா) ஜோடி 7-6 (10-4) என்ற புள்ளிக்கணக்கில் யுகி பாம்ப்ரி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட யுகின் பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.






