செய்திகள்

இலங்கை மந்திரியை ‘குரங்கு’ என விமர்சனம்: மலிங்காவுக்கு 1 ஆண்டு தடை - அபராதம்

Published On 2017-06-28 07:18 GMT   |   Update On 2017-06-28 07:18 GMT
இலங்கை விளையாட்டுத் துறை மந்திரியை ‘குரங்கு’ என்று விமர்சித்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு 1 ஆண்டு தடையும், அபராதமும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது.
கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் மலிங்கா. இவர் சமீபத்தில் இலங்கை விளையாட்டுத் துறை மந்திரி தயாசிரி ஜெயசேகராவை குரங்கு என்று விமர்சனம் செய்து இருந்தார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறாததால் விளையாட்டு மந்திரி அதிருப்தி அடைந்தார். இலங்கை வீரர்களின் உடல் தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து மலிங்கா கருத்து தெரிவிக்கும்போது கிளியின் கூடு பற்றி குரங்கு பேசுவது போல இருக்கிறது. கிளிகூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்றார். அவரது இந்த பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.



இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி எதுவும் பெறாமல் மலிங்கா மீடியா முன்பு இவ்வாறு கூறியது வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதாகும். இது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு விசாரனை நடத்தியது.

இதன் அடிப்படையில் அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரை 1 ஆண்டுக்கு சஸ்பெண்டு செய்து அறிவித்துள்ளது. 6 மாதத்திற்கு பிறகு இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும்.

மேலும் மலிங்காவுக்கு அடுத்த போட்டியில் விளையாடும் ஆட்டத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News