செய்திகள்

மெஸ்சியின் ஜெயில் தண்டனைக்குப் பதிலாக 2.5 லட்சம் யூரோ அபராதம்: அரசு வக்கீல் ஆதரவு

Published On 2017-06-23 12:02 GMT   |   Update On 2017-06-23 12:05 GMT
மெஸ்சி தனது 21 மாத தண்டனைக்குப் பதிலாக 2.50 லட்சம் யூரோ வழங்கினால் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என்று ஸ்பெயின் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணியின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.

ஸ்பெயின் நாட்டில் தனது படத்திற்கான உரிமம் மூலம் பலகோடி கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இதற்கு வரிகட்டாமல் வரிஏய்ப்பு செய்துள்ளதாக ஸ்பெயின் நாட்டின் வருமான வரித்துறையினர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஸ்பெயின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது மெஸ்சிக்கு 21 மாதத் தண்டனை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

மெஸ்சி 21 மாதம் ஜெயிலுக்குச் சென்றால் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இதனால் அர்ஜென்டினா சார்பில் சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதமாக விதிக்கலாம் என்று பரிந்துரை செய்தது.

அபராதத்திற்கு ஸ்பெயின் நாட்டின் அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் மெஸ்சி அபராதத்துடன் தப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெஸ்சி ஒரு நாளைக்கு 400 யூரோ அடிப்படையில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் யூரோ கட்ட இருக்கிறார்.
Tags:    

Similar News