செய்திகள்

வீராட்கோலிக்கும், எனக்கும் சுமூகமான உறவு இல்லை: கும்ப்ளே

Published On 2017-06-21 06:50 GMT   |   Update On 2017-06-21 10:00 GMT
கேப்டனான வீராட் கோலிக்கும், பயிற்சியாளரான எனக்கும் சுமூகமான உறவு இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
லண்டன்:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய கும்ப்ளே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக என்னை நீடிக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. இது என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகும். இதை கவுரவமாக கருதுகிறேன்.

கடந்த ஒரு ஆண்டாக என்னால் சிறப்பாக சாதிக்க முடிந்ததற்காக கேப்டன், அணி வீரர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

முதல் முறையாக நேற்று என்னிடம் கிரிக்கெட் வாரியம் கேப்டன் பதவிக்குரிய தனித்தன்மைகள் பற்றி தெரிவித்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே உள்ள எல்லை பற்றி நான் எப்போதுமே மதிக்கக்கூடியவன்.

ஆனாலும் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் இடையே நிலவிய தவறான புரிதல்கள் குறித்து தீர்த்து வைக்க கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. கேப்டனான வீராட் கோலிக்கும், பயிற்சியாளரான எனக்கும் சுமூகமான உறவு இல்லை.



இருவரும் இணைந்து செயல்படுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. இது வெளிப்படையாகவே தெரிந்தது. இதனால் நான் சிறந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

கடந்த 1 ஆண்டாக பயிற்சியாளர் பதவியில் இருந்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
Tags:    

Similar News