செய்திகள்

உமர் அக்மல் விவகாரம்: பாகிஸ்தான் பயிற்சியாளர்- இன்சமாம் மோதல்

Published On 2017-05-24 07:16 GMT   |   Update On 2017-05-24 07:16 GMT
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் அக்மல் நீக்கப்பட்ட விவகாரத்தில் பயிற்சியாளர்- இன்சமாம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமபாத்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து உமர் அக்மல் நீக்கப்பட்டார்.

2 முறை நடத்தப்பட்ட உடல் தகுதி சோதனையில் அவர் தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து உமர் அக்மலை இங்கிலாந்தில் இருந்து உடனடியாக திரும்புமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஹாரிஸ் சோகைல் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் உமர் அக்மல் விவகாரத்தில் பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்சமாம்- பயிற்சியாளர் மிக்சி ஆர்தர் இடையே மோதல் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.உமல் அக்மலுக்கு முதலில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இன்சமாம் மேற்பார்வையில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் உடல் தகுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் தேர்வு குழு தேர்வு செய்தது.



ஆனால் இந்த உடல் தகுதி தேர்வில் பயிற்சியாளர் ஆர்தருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து இங்கிலாந்து சென்ற பிறகு உமர் அக்மலுக்கு 2-வது முறையாக உடல் தகுதி சோதனை செய்ய அவர் உத்தரவிட்டார். இந்த உடல் தகுதி சோதனையில் அவர் உடல் தகுதியுடன் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உமர் அக்மலை நீக்கியது. இந்த விவகாரத்தில் இன்சமாம்- ஆர்தர் இடையே மோதல் உருவாகி இருக்கிறது.

இந்த தகவலை பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News