செய்திகள்

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: சென்னை எப்.சி. அணிக்கு 2-வது வெற்றி

Published On 2017-03-24 03:58 GMT   |   Update On 2017-03-24 03:58 GMT
நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்று நடந்த லீக் ஆட்டடத்தில் சென்னை எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
சென்னை :

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி.-மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி.-ரங்கூன் எப்.சி. அணியும் (காலை 7 மணி), சீனியர் டிவிசன் லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி.-விவா சென்னை அணியும் (மாலை 5 மணி) மோதுகின்றன.

Similar News