செய்திகள்

ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டேனா?: மொகமது அமிர் விளக்கம்

Published On 2017-03-23 11:25 GMT   |   Update On 2017-03-23 11:25 GMT
ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்திக்கு பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் லண்டன் சென்று தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்

நேற்று இங்கிலாந்தின் நாடாளுமன்றம் அருகே தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்னர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபலமான ஹீத்ரோ விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது அமிரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள் என்று செய்து வெளியானது.



இதுகுறித்து அறிந்த மொகமது அமிர், ‘‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நான் எனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் சந்தோஷமாக நேரத்தை கழித்து வருகிறேன்’’ என்று தனது குடும்பத்துடன் கூடிய படத்தை வெளியிட்டு டுவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.



பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக லண்டனில் இருந்து அமிர் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார்.

Similar News