செய்திகள்

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது அவமானகரமானது: அசாருதீன்

Published On 2017-02-20 17:16 GMT   |   Update On 2017-02-20 17:16 GMT
ஐ.பி.எல். தொடருக்கான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியது அவமானகரமானது என அசாருதீன் சாடியுள்ளார்.
இந்திய அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. சமீபத்தில் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 9 சீசனிலும் டோனி கேப்டனாக இருந்துள்ளார்.

10-வது சீசன் நடைபெற இருக்கும் நிலையில் திடீரென புனே அணி நிர்வாகம் டோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது. இதனால் டோனி ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இதற்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு அவமானகரமானது என்று சாடியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘இந்த முடிவு மற்றும் வெளியேற்றிய முடிவு மிகவும் இழிவானது. இந்திய கிரிக்கெட் அணியின் தங்கமாக திகழ்ந்தவர் டோனி. சுமார் 8 முதல் 9 வருடங்களாக கேப்டன் பதவியில் டோனி சாதனைப் படைத்துள்ளார். நாங்கள் பணம் செலவழிக்கிறோம். அணியை நடத்துபவர்கள் நாங்கள்தான் என்று அந்த அணியின் உரிமையாளர்கள் கூறலாம்.

அதேவேளையில் தலைமை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னதாக தோனியின் தகுதியையும், திறமையையும் நம்பகத்தன்மையையும் அவர்கள் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும். இரக்கமே இல்லாமல் கேப்டன் பதவியில் இருந்து டோனியை நீக்கியுள்ளது முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற அடிப்படையில் எனக்கு ஆத்திரத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

Similar News