செய்திகள்

மற்ற நியூசி. அணி செய்தாததை இந்த அணி செய்யும்: சவுத்தி சவால்

Published On 2016-10-28 16:23 GMT   |   Update On 2016-10-28 16:24 GMT
நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மற்ற நியூசிலாந்து அணிகள் செய்தாததை தற்போதைய அணி செய்யும் என்று நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி கொக்கரித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார் என்ற பலப்பரீட்சை நாளை விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது. இதுவரை நியூசிலாந்து அணி இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது கிடையாது.

அந்த வரலாற்றை மாற்றி முந்தைய அணியால் செய்ய முடியாததை தற்போதைய அணி செய்து காட்டும் என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கொக்கரித்துள்ளார்.

இதுகுறித்து சவுத்தி கூறுகையில் ‘‘இதற்கு முன் நியூசிலாந்து அணிகள் செய்ய முடியாததை செய்து காட்ட தற்போதைய அணி வீரர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். அணியின் வீரர்களிடையே உற்சாகம் அதிக அளவில் உள்ளது’’ என்றார்.

Similar News