செய்திகள்

ஈடன் கார்டன் டெஸ்ட்: கங்குலியிடம் ஆலோசனைப் பெற்ற நியூசிலாந்து

Published On 2016-09-29 14:19 GMT   |   Update On 2016-09-29 14:19 GMT
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஈடன் கார்டனில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் சுழற்பந்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து கங்குலி நியூசிலாந்து அணிக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் ஈடன் கார்டன் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி மைதானம் வந்திருந்தார். அவருடன் நியூசிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மெக்மில்லன் மற்றும் அந்த அணியின் அதிகாரிகளும் பேசினார்கள்.

அப்போது துணைக்கண்டத்தில் நாங்கள் சுழற்பந்து வீச்சுக்கு திணறி வருகிறோம். சில டிப்ஸ் கொடுங்கள் என்று கேட்டனர். கங்குலியும் மறுக்காமல் அவர்களுக்கு சில டிப்ஸ்களை வழங்கினார். மேலும், இடது கை பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் ஆடுகளத்தை சோதனையிட்ட அவர் ‘‘ஆடுகளம் முதல் இரண்டு நாட்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இருக்கும். 3-வது நாட்களுக்குப்பின் பந்து நன்றாக திரும்பும். பந்து வேகமாக செல்வதற்கு பெர்முடாவில் இருந்து புற்களை கொண்டு வந்து கடினமாக ஆடுகளத்தை உருவாக்கியுள்ளோம். அந்த புற்களின் சிறப்பம்சம் என்னவெனில், இந்த புற்கள் வேகமாக வளரும். அதேபோல் ஈரத்தன்மையை உடனடியாக வெளியேற்றும் தன்மையுடையது’’ என்றார்.

Similar News