செய்திகள்

ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ்: லெவிஸ் ஹாமில்டன் வெற்றி

Published On 2016-07-24 14:42 GMT   |   Update On 2016-07-24 14:42 GMT
பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தின் ஹங்கேரி கிராண்ட் ப்ரிக்ஸில் மெர்சிடெஸ் அணி வீரர் லெவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.
2016-ம் வருடத்தின் பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பந்தய போட்டி 21 சுற்றுகளாக நடக்கிறது. இதுவரை 10 சுற்றுகள் முடிந்து 11-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸ் இன்று நடைபெற்றது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் முடிவில் மெர்சிடெஸ் அணியின் நிகோ ரோஸ்பெர்க் போல் நிலையை அடைந்தார். லெவிஸ் ஹாமில்டன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

இன்று நடைபெற்ற ஹங்கேரி கிராண்ட் ப்ரிக்ஸில் நிகோ ரோஸ்பெர்க் முதல் இடத்தில் இருந்து புறப்பட்டார். 70 சுற்றுகளை கொண்ட 191 மைல் தூரத்தை ஹாமில்டன், பந்தய தூரத்தை ஒரு மணி நேரம் 24 நமிடங்கள் 684 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். ரோஸ்பெர்க் ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் 594 நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தை பிடித்தார்.

மொத்தமாக சாம்பியனுக்கான புள்ளிகளில் இதுவரை ரோஸ்பெர்க் முதலில் இருந்தார். தற்போது ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி பெற்றுள்ளதால் 192 புள்ளிகள் பெற்று ஹாமில்டன் முதல் இடத்தில் உள்ளார். ரோஸ்பெர்க் 186 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

Similar News