இந்தியா

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 20,551 பேருக்கு தொற்று

Published On 2022-08-05 04:44 GMT   |   Update On 2022-08-05 04:44 GMT
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 21,595 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு கடந்த 2-ந்தேதி 13,734 ஆக இருந்தது. மறுநாள் 17,135 ஆகவும், நேற்று 19,893 ஆகவும் உயர்ந்த நிலையில் இன்று 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக 20,551 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது.

தலைநகர் டெல்லியில் 6 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அங்கு புதிதாக 2,202 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் டெல்லியில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 11.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தை தாண்டி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர கர்நாடகாவில் 1,992, மகாராஷ்டிராவில் 1,862, ஒடிசாவில் 1,790, கேரளாவில் 1,364, தமிழ்நாட்டில் 1,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 588 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் கேரளாவில் 27 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 70 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,600 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 21,595 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 624 ஆக உயர்ந்தது.

தற்போது 1,35,364 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,114 குறைவு ஆகும்.

Tags:    

Similar News