இந்தியா

புதிதாக 18,840 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.25 லட்சமாக உயர்வு

Published On 2022-07-09 04:16 GMT   |   Update On 2022-07-09 04:16 GMT
  • கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்த 16,104 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 980 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி:

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் பாதிப்பு 18,930 ஆக இருந்தது. நேற்று 18,815 ஆக குறைந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 18,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,310, மேற்கு வங்கத்தில் 2,950, மகாராஷ்டிராவில் 2,944, தமிழ்நாட்டில் 2,722, கர்நாடகாவில் 1,037 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 394 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் கேரளாவில் 19 பேர், மகாராஷ்டிராவில் 7 பேர் உள்பட மேலும் 43 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,25,386 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்த 16,104 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 980 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் 2,693 அதிகரித்துள்ளது. தற்போது 1,25,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 198 கோடியே 65 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இதில் நேற்று 12,26,795 டோஸ்கள் அடங்கும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.61 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,54,778 மாதிரிகள் அடங்கும்.

Tags:    

Similar News