இந்தியா

3.5 கோடி பேருக்கு சிலிண்டர் வாங்க முடியவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2022-07-01 03:04 GMT   |   Update On 2022-07-01 03:04 GMT
  • சிலிண்டர் விலை உயர்ந்து, இன்று ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது.
  • 'உஜ்வாலா' திட்டம் பற்றி விளம்பரப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது.

புதுடெல்லி :

கடந்த நிதிஆண்டில் (2021-2022) 3 கோடியே 59 லட்சம் வாடிக்கையாளர்களால் ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியவில்லை என்று ஒரு ஊடக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் பற்றி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருந்து பத்திரிகைகள் வரை விளம்பரப்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. படிப்படியாக சிலிண்டர் விலை உயர்ந்து, இன்று ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. பிரதமர் மோடி, ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு ஒன்று என 2 இந்தியாக்களை உருவாக்கி இருக்கிறார்.

அவர் ஒரு பொதுக்கூட்டத்தில், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்கும் தாய்மார்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ஆனால், ஒரே ஆண்டில் அவர் 3 கோடியே 59 லட்சம் பேரை மண்ணெண்ணெய் அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார். எப்படி இவ்வளவு போலி கண்ணீர் வடிக்கிறீர்கள், பிரதமரே?"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News