இந்தியா

பால் புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி

Published On 2024-01-23 13:32 GMT   |   Update On 2024-01-23 13:50 GMT
  • பால் புரஸ்கார் விருதுக்கு தேர்வான சிறுவர்களுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதினை வழங்கினார்.
  • விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது.

தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு கலை மற்றும் கலாசாரத் துறை, துணிச்சல் சமூக சேவை மற்றும் விளையாட்டு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனை படைத்த 19 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

இந்நிலையில், பால் புரஸ்கார் விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Tags:    

Similar News