மூச்சுமுட்ட குமுறிய இடைத்தரகர்: அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் ஸ்டைலில் பதில் அளித்த நிர்மலா சீதாராமன்!
- ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, ஸ்டாம்ப் வரி, எஸ்டிடி, நீண்ட கால மூலதன ஆதாய வரி.
- இன்றைய காலக்கட்டத்தில் எங்களை போன்ற இடைத்தரகரை விட இந்திய அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது.
இந்திய நிதிச் சந்தைகளுக்கான பார்வை என்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் உடன் மும்பையைச் சேர்ந்த முதலீட்டிற்கான இடைத்தரகர் ஒருவர் அரசு வசூலிக்கும் வரி தொடர்பாக தனது குமுறலை வெளிப்படுத்தினார்.
அந்த புரோக்கர், "ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, ஸ்டாம்ப் வரி, எஸ்டிடி, நீண்ட கால மூலதன ஆதாய வரி உள்ளிட்ட வரிகள் மூலம், எங்களைப் போன்ற இடைத்தரகரை விட அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டும் நிலை உருவாகியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் எங்களை போன்ற இடைத்தரகரை விட இந்திய அரசு அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது.
முதலீட்டாளர்கள், இடைத்தரகர்கள் அடிக்கடி கடினமான ரிஸ்க் எடுக்கும் நிலையில், அரசு எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்கவில்லை. நான் மொத்தமாக அனைத்து ரிஸ்க்கையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அரசு அனைத்து வகையிலான லாபத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் (அரசு) என்னுடைய ஸ்லீப்பிங் பார்ட்னர் (முதலீடு செய்யாமல் சாம்பாதிப்பவர்) நான் வொர்க்கிங் பார்ட்னர் (நிர்வாகம் தொடர்பான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்பவர்).
இவ்வாறு அந்த இடைத்தரகர் தனது குமுறலை தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராம், ஸ்லீப்பிங் பார்ட்னர் இங்கே உட்கார்ந்து கொண்டு பதில் சொல்ல முடியாது" என்றார். நிர்மலா சீதாராமனின் பதிலை கேட்டு பார்வையாளர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதேவேளையில் மோடி தலைமையிலான 10 வருட ஆட்சியில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு கட்டமைப்புகளை உருவாக்க மோடி அரசு கொண்டு வந்த கொள்கைகள் குறித்து பேசினார். 3.74 லட்சம் கி.மீட்டர் தூரம் கிராமப் புற சாலைகள் போடப்பட்டுள்ளன. நகர்ப் பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடைந்துள்ளன என்றார்.
ஒரு படத்தில் தோசை ஆர்டர் செய்யும் வடிவேலு அது எப்படி சுட வேண்டும் என்று சப்ளையரிடம் நீண்டம் நேரம் விளக்கிக் கூறுவார். அதையெல்லாம் கேட்ட சப்ளையர், இறுதியாக அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் எனக் கூறும் காமெடி மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.