இந்தியா

(கோப்பு படம்)

டெல்லியில் நாளை நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம்- பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்

Published On 2022-08-05 21:39 GMT   |   Update On 2022-08-05 21:39 GMT
  • தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
  • மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக தற்போது இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News