இந்தியா

(கோப்பு படம்)

குரங்கு அம்மை நோய் - விமான நிலையங்களில் பரிசோதனையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு

Published On 2022-07-18 15:18 GMT   |   Update On 2022-07-18 15:18 GMT
  • கேரளாவில் 2வது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.
  • இந்தியா வரும் சர்வதேச பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்த அறிவுரை

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கேரளா வந்த கன்னூர் மாவட்டத்தை நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துஐற அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் மருத்துவ விளக்கக் காட்சிபடி இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News