இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால்        அனுராக் தாக்கூர் 

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த கெஜ்ரிவால்- மலிவான அரசியல் என்கிறார் அனுராக் தாக்கூர்

Published On 2022-06-05 19:50 GMT   |   Update On 2022-06-05 19:50 GMT
  • காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
  • காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பண்டிட்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து டெல்லியில் நேற்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய கெஜ்ரிவால், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு வழங்க பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையைச் சமாளிக்க எந்த ஒரு செயல் திட்டத்தையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் கடந்த 1990-களில் இருந்த நிலை மீண்டும் திரும்புகிறது என்றும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் கெஜ்ரிவால் மலிவான அரசியல் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தேசமும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் தோளோடு தோள் நின்று பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து வரும் இந்த நேரத்தில், பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கெஜ்ரிவால் பேசவில்லை என்றும் அனுராக் தாக்கூர் கூறினார்.

ஆயுதப் படை வீரர்களின் வீரத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள் மற்றும் அதிகாரத்திற்காக தேச விரோத காலிஸ்தான் படைகளுடன் கைகோர்ப்பவர்கள், எந்த முகத்தைக் கொண்ட பயங்கரவாதத்தை கண்டனம் செய்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Tags:    

Similar News