இந்தியா

தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 199 கோடியை தாண்டியது- புதிய பாதிப்பு 13,615 ஆக குறைந்தது

Published On 2022-07-12 05:17 GMT   |   Update On 2022-07-12 05:17 GMT
  • கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆக உயர்ந்தது.
  • இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 199 கோடியே 59 ஆயிரம் டோஸ்களை கடந்துள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், நாடு முழுவதும் மேலும் 13,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. 4 நாட்களாக பாதிப்பு 18 ஆயிரத்தை கடந்த நிலையில் நேற்று 16,678 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மேலும் சரிந்துள்ளது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 52 ஆயிரத்து 944 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 13,265 பேர் நேற்று நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 427 ஆக உயர்ந்தது.

தற்போது 1,31,043 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 330 அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,25,474 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் நேற்று 10,64,038 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 199 கோடியே 59 ஆயிரம் டோஸ்களை கடந்துள்ளது.

இதற்கிடையே நேற்று 4,21,292 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News