இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது- அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2022-07-29 08:44 GMT   |   Update On 2022-07-29 08:44 GMT
  • இந்த பாடத்திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  • இதனால் டெல்லியில் மாணவர் தற்கொலை என்பதே கிடையாது.

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி என்ற பெயரில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு சார்பில் கடந்த 4 வருடங்களாக செயல்படுத்தப்பட்ட  இந்த வகுப்புகளில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

அப்போது அரங்கில் கூடியிருந்த பள்ளி ஆசிரியர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாத்தியத்தை இசைத்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், மாணவர்களின் மகிழ்ச்சியை உறுதி செய்தல், அவர்களின் திறமைகளை கண்டறிய உதவுதல் ஆகியவற்றிற்காக இந்த பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.

இந்த பாடத்திட்டத்தால் பல மாணவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது என்றும் இதற்காக பட்ஜெட்டில் 25% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களை நல்ல மனிதர்களாகவும், தேச பக்தி உள்ளவர்களாகவும், வேலை வாய்ப்புக்கு தகுதியானவர்களாகவும் உருவாக்குவதே மகிழ்ச்சி பாடத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மகிழ்ச்சி பாடத்திட்டம் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதால் டெல்லியில் மாணவர், மாணவி தற்கொலை என்பதே கிடையாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.


Tags:    

Similar News