இந்தியா
சுப்ரீம் கோர்ட்

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

Published On 2022-05-19 06:44 GMT   |   Update On 2022-05-19 11:47 GMT
பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.



அப்போது நீதிபதிகள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர். இந்த மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News