இந்தியா
உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு நகல் வெளியானது

Update: 2022-05-18 13:01 GMT
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அளித்த 29 பக்க தீர்ப்பு நகல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், நாளை அறப்போராட்டம் நடத்தவுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் வெளியானது. உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அளித்த 29 பக்க தீர்ப்பு நகல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.. டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் திடீர் ராஜினாமா
Tags:    

Similar News