இந்தியா
பள்ளி மாணவர்கள் (கோப்புப்படம்)

கோடை வெப்பம் எதிரொலி- பள்ளி நேரத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2022-05-11 14:24 GMT   |   Update On 2022-05-11 14:24 GMT
வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்குள் முடிக்கலாம் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பள்ளியில் காலையில் நடத்தப்படும் வழிபாட்டை நிழலாக உள்ள இடத்தில் நடத்த வேண்டும். வெயில் அதிகமாக உள்ளதால் வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

பள்ளி வாகனங்களில் அதிக அளவிற்கு மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் அதில் முதலுதவி பெட்டி அவசியம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், முடிந்தளவு தங்கள் குழந்தைகளை பெற்றோர்களே அழைத்து வரலாம் என்று மத்திய அரசு யோதனை தெரிவித்துள்ளது.
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. குழந்தைகளுடன் சிரமமின்றி பயணிக்க 'பேபி பெர்த்' வசதி- ரெயில்வே அறிமுகம்
Tags:    

Similar News