இந்தியா
ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீநகரில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் நிலை ஆலோசகராக நியமனம்

Published On 2022-04-29 06:01 GMT   |   Update On 2022-04-29 06:01 GMT
இதுதொடர்பான உத்தரவை சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஸ்ரீநகர் மாவட்டத்தின் நிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வழக்கறிஞர் சேகர் நசீர். ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்.

இந்நிலையில், ஸ்ரீநகர் மாவட்டத்தின் நிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதுதொடர்பான உத்தரவை சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்தது.

இதுகுறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்யும் வகையிலும், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டிற்கான சம வாய்ப்புகளை வழங்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதைக்குரிய இடத்தை உருவாக்குவதற்கும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் சேகர் நசீர் ஸ்ரீநகரில் உள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் அரசு வழக்குகளை வாதாடுவதற்காக நிலை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை
Tags:    

Similar News