இந்தியா

முன்னாள் நீதிபதியும் பாஜக வேட்பாளருமான அபிஜித் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணிநேரம் தடை

Published On 2024-05-21 15:39 IST   |   Update On 2024-05-21 15:39:00 IST
  • கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.
  • அபிஜித் பாஜக சார்பாக தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்து பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அபிஜித் கீழ்த்தரமான விமர்சனம் செய்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில், பாஜக வேட்பாளரான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Tags:    

Similar News