இந்தியா
முக கவசம்

உத்தர பிரதேசத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்

Update: 2022-04-18 08:50 GMT
தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
லக்னோ:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.

காசியாபாத், லக்னோ, மீரட் ஆகிய நகரங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உ.பி. அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News