இந்தியா
பிரதமர் மோடி

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன் - பிரதமர் மோடி

Published On 2022-03-21 14:45 GMT   |   Update On 2022-03-21 14:45 GMT
விமானம் விழுந்து நொறுங்கிய சி.சி.டிவி காட்சிகளும், விமான விபத்துக்கு உள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகின.
புதுடெல்லி:

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 132 பேருடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் குவாங்ஸி அருகே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்துள்ளது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 

இந்நிலையில், சீனாவில் 132- பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News