இந்தியா
எஸ்.பி.ஐ. வங்கி

பணியில் சேர கர்ப்பிணி பெண்கள் தகுதியற்றவர்களா?: எஸ்.பி.ஐ.-க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Update: 2022-01-29 06:47 GMT
மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணியில் சேர தகுதியற்றவர்கள் என்ற எஸ்.பி.ஐ. வழிகாட்டு நெறிமுறைக்கு எதிராக மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கி மூன்று மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் வேலையில் சேர்வதற்கு தகுதியற்றவர்கள் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது பாரபட்சமானது. சட்டத்திற்கு புறம்பானது. சட்டம் வழங்கும் மகப்பேறு சலுகைகள் பாதிக்கப்படும் என டெல்லி மகளிர் ஆணையம் தலைவர் ஸ்வாதி மலிவால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு எதிரான இந்த விதியை திரும்பப்பெறுமாறு டெல்லி மகளிர் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி எ.பி.ஐ., மூன்று மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை புதிதாக வேலையில் சேர்க்க வேண்டாம்.

அவர்கள் புதிதாக வேலையில் சேர தகுதி பெற்றிருந்தாலும், சேர்க்க வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், அந்த பெண் தற்காலிகமாக தகுதியற்றவர். குழந்தை பிறந்து நான்கு மாதம் கழித்து வேலையில் சேரத் தகுதியானர் ஆவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News