search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆணையம்"

    • இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள்.
    • நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 4.5 சதவீதம் பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.

    புதுடெல்லி:

    சிவில் விமான போக்குவரத்துத்துறையில் இந்தியாவில்தான் பெண் விமானிகள் அதிகம் இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் உள்ள மொத்த விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்கள். உலக சராசரியைவிட இது 3 மடங்கு அதிகம் ஆகும்.

    இந்தியாவுக்கு அடுத்ததாக அயர்லாந்தில் 9.9, தென் ஆப்பிரிக்காவில் 9.8, ஆஸ்திரேலியா 7.5, கனடா 7, ஜெர்மனி 6.9, அமெரிக்கா 5.5, இங்கிலாந்து 4.7, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் நாடுகளில் தலா 4.5 சதவீதம் பெண்கள் சிவில் விமான போக்குவரத்துத்துறையில் விமானிகளாக உள்ளனர்.

    • தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொன்விழா மாநாடு கடந்த 20-ந்தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி.யை அவதூறாக விமர்சிக்கும் வகையிலான பாடல் இடம்பெற்றது. இந்தப்பாடல் பேஸ்புக், 'எக்ஸ்' என்ற டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இது தி.மு.க. மகளிரணியினர் உள்பட கட்சியினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தி.மு.க. மாநில பிரசாரக்குழு செயலாளர் அண்ணாநகர் ராணி, சமூக வலைத்தள பொறுப்பாளர் ரத்னா லோகேஷ் உள்பட தி.மு.க. மகளிரணியைச்சேர்ந்த நிர்வாகிகள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில், அதன் தலைவர் ஏ.எஸ்.குமரியை நேற்று நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து, தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மதுரையில் கடந்த 20-ந்தேதியன்று நடைபெற்ற அ.தி.மு.க.வின் மாநில மாநாட்டில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியை தரைக்குறைவாக விமர்சிக்கும் வகையில் பாடல் பாடப்பட்டது. அங்கு இருந்த முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கைதட்டி சிரிக்கிறார்கள். நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் கனிமொழி கருணாநிதி. அவரை தரக்குறைவாக பேசியவரை கைது செய்யவேண்டும். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கனிமொழி கருணாநிதியை தரக்குறைவாக விமர்சித்து பாடிய செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் அணி சார்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம் :

    திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் வித, விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மணமகனின் வீட்டில் கால் வைப்பதற்கு முன் மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது, அரிசி நிரப்பப்பட்ட நாழியை காலால் தட்டி விடுவது உள்பட பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சடங்குகள் தவிர மணமக்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் வேதனைப்படுத்தும் சில சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மணமகனின் வீட்டுக்குள் செல்வதற்கு முன் புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சினுக்கும், கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லாவுக்கும் திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டின் முன்பு வைத்து புதுமண தம்பதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பிறகு சஜ்லா வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது திடீரென மணமக்களின் பின்னால் இருந்த ஒரு நபர் 2 பேரின் தலையையும் பிடித்து பலமாக முட்ட வைத்தார். இதில் 2 பேருக்கும் கடும் வேதனை ஏற்பட்டது. சஜ்லாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் சஜ்லாவுக்கு ஆறுதல் கூறி மணமகனின் தாய் உள்பட உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    மணமகள் சஜ்லா கூறும்போது, 'திடீரென நடந்த இந்த சம்பவத்தால் தலையில் கடும் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.

    மணமகன் சச்சின் கூறும்போது, 'இப்படி ஒரு சம்பிரதாயம் குறித்து கேள்விப்பட்டதே இல்லை' என்றார். இதுபோன்ற சம்பிரதாயம் பாலக்காட்டில் இருக்கிறது என்று வேறு சிலரும் கூறினர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • மாணவிகளிடம் தனித்தனியாக மனித உரிமைகள் ஆணைய குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதேபோல் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்தியது.

    நேற்று மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கினர். கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராமதாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக சுமார் 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மாணவிகள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், நிர்வாகத்தினர் யாரும் இல்லாமல் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இன்று பிற்பகல் விசாரணை நிறைவடைந்தது.

    இதையடுத்து இறுதி அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் எஸ்.பி. மகேஷ்வரன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
    • 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ராவில் பேராசிரியர் ஹரிபத்மன் உள்பட 3 நடன பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவிகள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவிகள் பலர் கலாஷேத்ராவில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்து வாக்குமூலம் அளித்தனர். இதனை மகளிர் ஆணையம் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.

    அந்த அறிக்கையில் கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் தெரிவித்த கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வெளியில் உள்ள நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நடன பயிற்சியாளர்களான ஸ்ரீநாத், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் ஏற்கனவே மாணவிகள் பாலியல் புகார் கூறி இருந்தனர். இந்த நிலையில் மகளிர் ஆணையம் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து 3 பேர் மீதும் உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நடன பயிற்சியாளர்கள் 3 பேர் மீதும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கைது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இதன் முடிவில் 3 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

    • கலாஷேத்ராவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது.
    • பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.

    மேலும் 3 பேராசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியதால் ஹரிபத்மன் உள்பட 4 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

    கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியது. மாணவிகள் எந்தெந்த வகையில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்கள் என நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களிடமும் விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், குமார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் தரப்பில் இன்று தேர்வு நடப்பதால் நாளை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதனை மனித உரிமைகள் ஆணைய குழுவினர் ஏற்கவில்லை. விசாரணை தாமதம் ஆனால் வழக்கு நீர்த்து போகும் என்பதால் இன்றே விசாரணையை தொடங்கினர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள், பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பேராசிரியர் ஹரி பத்மன் எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். அவர் வகுப்பில் படித்த மாணவிகளிடமும் விசாரணை நடந்தது. மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணை பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் இன்று விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், மாணவ-மாணவியர்களுக்கு தற்போது தேர்வு நடைபெறுவதால் தேர்வு முடிந்த பிறகு அடுத்த வாரம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையில் பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமீன் மனு சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • கலாஷேத்ரா விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை அடையாறு மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

    தற்போது இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி., பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி 6 வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஐ.ஜி. தலைமையிலான அதிகாரிகள் இன்று கலாஷேத்ரா கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் 2 டி.எஸ்.பி.க்கள், பெண் காவல் ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
    • புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா நடன கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன், முன்னாள் மாணவி கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஹரிபத்மனின் மனைவி திவ்யா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்துள்ளார்.

    அந்த மனு அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நானும், எனது கணவர் வேலை பார்த்த அதே கலாஷேத்ரா கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன். எனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை. என் கணவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, 2 பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரில், அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார். தவறான அந்த புகார் மனு மீது ஒரு பெண் போலீஸ் அதிகாரியை நியமித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். குறிப்பிட்ட முன்னாள் மாணவி பொய்யான புகாரை என் கணவர் மீது கொடுத்துள்ளார்.

    புகார் கொடுத்த குறிப்பிட்ட மாணவி, 2019-ம் ஆண்டு கல்லூரியில் இருந்து வெளியேறும் முன்பு எனது மகளின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். எனவேதான் தூண்டுதலின்பேரில் அந்த மாணவி தற்போது புகார் கொடுத்துள்ளார், என்று குற்றம் சாட்டுகிறேன். பொய்யான புகார் கொடுத்த முன்னாள் மாணவி மீதும், அந்த மாணவியை தூண்டிவிட்ட 2 பேராசிரியைகள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் மீதான வழக்கை சட்டப்படி அவர் சந்திப்பார்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் திவ்யா தெரிவித்துள்ளார்.

    • தனது பேச்சுக்கு கட்டுப்படாத மாணவிகளை பழி வாங்கும் வகையிலும் ஹரிபத்மன் நடந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
    • கேரள மாணவியிடம் ஹரிபத்மன் தகாத முறையில் பேசியது பற்றிய விவரங்களை 5 மாணவிகளும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய ஆதாரங்களை திரட்டினர். இதைத்தொடர்ந்தே ஹரி பத்மன் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.

    கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரில் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதும், ஹரிபத்மன் காதல் மன்னனாக வலம் வந்ததும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.

    முன்னாள் மாணவியின் தோழிகள் 5 பேரிடம் கேரளாவில் நடத்தப்பட்ட விசாரணையும், அவர்கள் அளித்துள்ள பரபரப்பு சாட்சியங்களுமே ஹரி பத்மனை வசமாக சிக்க வைத்துள்ளது.

    கேரள மாணவியிடம் ஹரிபத்மன் தகாத முறையில் பேசியது பற்றிய விவரங்களை 5 மாணவிகளும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள். நான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். வீட்டுக்கு வருகிறாயா? என்று கேட்டு ஹரிபத்மன் சல்லாப முயற்சியில் ஈடுபட்டதும், கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது யாருடன் இருந்துவிட்டு வருகிறாய்? என்று மாணவியிடம் ஹரிபத்மன் கேட்டதும் உண்மைதான் என்று மாணவியின் தோழிகள் தெரிவித்துள்ளனர். இது போன்று பல மாணவிகளிடம் ஹரிபத்மன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனனர். ஹரிபத்மன் மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்வார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தனது பேச்சுக்கு கட்டுப்படாத மாணவிகளை பழி வாங்கும் வகையிலும் ஹரிபத்மன் நடந்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    வெளியில் நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் செல்லும்போது தேவையில்லாமல் பேசி மனக்கஷ்டத்தை ஏற்படுத்துவதையும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பேராசிரியர் ஹரிபத்மன் உடல் ரீதியாக தொல்லை கொடுக்கும் எண்ணத்திலேயே மாணவிகளுடன் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஹரிபத்மனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகின்றன.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். போலீசிலும் புகார் அளித்தனர்.

    மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, அந்தக் கல்லூரி மாணவிகளிடம் விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் குமாரி நேற்று மாலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்து பேசினார். அப்போது 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

    இதுபற்றி குமாரியிடம் கேட்டபோது, பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையை அறிக்கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    • கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
    • கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஹரிபத்மன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேரள மாணவியின் தோழிகள் 5 பேரிடம் விசாரணை நடத்தி போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டினர். அப்போது 5 மாணவிகளும் ஹரிபத்மனின் பாலியல் லீலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தனர். இதனை வாக்குமூலமாக பதிவு செய்த பிறகே ஹரிபத்மன் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சென்னை மாதவரம் பகுதியில் தோழி வீட்டில் பதுங்கி இருந்த ஹரிபத்மன் நேற்று காலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது. கலாஷேத்ரா அறக்கட்டளை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    கலாஷேத்ரா வளாகத்தில் நடந்த சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்துவதற்கு ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகி யோர் விசாரணை குழுவில் இடம் பெற்று உள்ளனர். பேராசிரியர் ஹரிபத்மன் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார்.

    கலாஷேத்ரா நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு புகார்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. ஆலோசனை குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் கலாஷேத்ரா, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு ஈடுபாட்டுடன் உள்ளது.

    இவ்வாறு கலாஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.

    இதை தொடர்ந்து இந்த குழுவினர் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    • மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
    • பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது பரபரப்பு புகார்களை சொன்னார்கள். இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாதவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் ஹரி பத்மன் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து மாணவிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

    ×