இந்தியா
வீணா ஜார்ஜ்

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு - வீணா ஜார்ஜ்

Published On 2022-01-28 01:08 GMT   |   Update On 2022-01-28 01:08 GMT
கேரளாவில் நேற்று மேலும் 51,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 6 சதவீதம் பேருக்கு டெல்டா வகை திரிபு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி வீணா ஜார்ஜ், கேரளாவில் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகிவிட்டது. கொரோனா நோயாளிகளின் 94 சதவீத மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா இருக்கிறது. டெல்டா வகை 6 சதவீத பேருக்கு மாதிரிகளில் உள்ளது.

மற்ற இடங்களிலிருந்து கேரளாவில் வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீதம் பேர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என தெரிவித்தார். 
Tags:    

Similar News