இந்தியா
யோகி ஆதித்யநாத்

உ.பி. தேர்தல்: 107 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக- கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் போட்டி

Published On 2022-01-15 08:13 GMT   |   Update On 2022-01-15 08:13 GMT
வேட்பாளர் பட்டியலை பாஜக மாநில பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான தர்மேந்திர பிரதான், பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.
புதுடெல்லி:

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. 

இந்நிலையில், முதல் 2 கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதில், 107 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 



வேட்பாளர் பட்டியலை பாஜக மாநில பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான தர்மேந்திர பிரதான், பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் வெளியிட்டனர். 

முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரம் தொகுதியிலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூர்யா, சிராத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News